SWAN SONG நாடகம்

நாடகமும் அரங்கியலும் துறையில் விபுலானந்தர் வளாகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் தர்மலிங்கம் அவர்களுடைய நெறியாள்கையிலும் நடிப்பிலும் அரங்கேறிய ருஷ்யக் கதாசிரியர் ANTON PAVLOVICH CHEKHOV என்பவருடைய SWAN SONG என்னும் நாடகம், குழந்தை சண்முகலிங்கம் அவர்களுடைய மொழிபெயர்ப்பில் அமைந்த ' அந்திமாலைப் பொழுது ' என்ற நாடகம். நாடக நெறியாள்கை தொடக்கத்திலிருந்து முடியும் வரை தனித்துவமாக இருந்ததைக் குறிப்பிட்டேயாகவேண்டும். தொடக்கமே இருள் சூழ்ந்த சூழலில் புகைபரவுவதும் அதனூடாக கதாநாயகன் கையில் சிறு தீபத்துடன் உலா வருவதும், அவனுடைய முகத்துக்கு மட்டும் சிறு வெளிச்சம் பாய்ச்சி முகபாவத்தை வெளிக்கொணர முயற்சித்த தன்மையும், உண்மையில் 'ஒளி நிழலில் புதுமையைப் புகுத்திய ஐரோப்பிய ஓவியர் REMBRANDT அவர்களுடைய ஓவியத்தைப் பார்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. நாடகத்தின் ஒவ்வொரு சட்டகமும் (FRAME) ஓவியமாகவே காட்சி தந்தது.

Connect with us

Swami Vipulananda Institute of Aesthetic Studies(SVIAS), Kallady, Batticaloa, Sri Lanka

  • dummy+94 65 222 5689

  • dummy+94 65 222 5689

  • dummy sviaseusl@yahoo.com

Newsletter

Enter your email and we'll send you more information

Search